Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணம்… சக்கரத்தில் சிக்கிய சேலை… தூக்கி வீசப்பட்ட பெண்…. பின் நேர்ந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிளின் பின்புற டயரில் சேலை சிக்கியதில் தூக்கி வீசப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள போடியை சேர்ந்த தம்பதியினர் சகாய திரவியம்- சுமதிமேரி. இவர்கள் பழ  வியாபாரம் செய்து வந்தனர். வழக்கமாக தம்பதியினர்  இருவரும்  பழங்களை தங்களுடைய கிராமத்திலிருந்து எடுத்து போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு பின்பு மோட்டா ர் சைக்கிளில் ஊருக்குத் திரும்புவர். அதன்படி  நேற்று முன்தினம் கணவன் -மனைவி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்  .

அப்போது எதிர்பாராதவிதமாக சுமதிமேரியின்  சேலை மோட்டார் சைக்கிளின்  பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக  தேனி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுமதிமேரி பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |