Categories
அரசியல் தேசிய செய்திகள்

பா.ஜ.க.-வை விட மோசமானது எதுவும் இல்லை – மம்தா பானர்ஜி சாடல் …!!

பாஜகவை விட மோசமானது எதுவுமில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

முடிந்தால் தனது ஆட்சியை கலைத்து பாருங்கள் என்றும் பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை அகற்ற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் அவ்வப்போது மேற்கு வங்கம் சென்று தேர்தல் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆட்சியை தக்கவைக்க மம்தாவும் போராடி வருகிறார். இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் வலுத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதாக ஆளுநர் ஜெகதிக் தங்கர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, முடிந்தால் தனது ஆட்சியை கலைத்துவிட்டு மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி பாருங்கள் என்று பாஜக விற்கு சவால் விடுத்தார். பாரதிய ஜனதாவை விட மோசமானவர்கள் யாரும் இல்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

Categories

Tech |