தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து தேவைகளையும் அரசு பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள்மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி நகர்ப்புற அரசு பள்ளி மாணவிகள், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ள பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலவச நாப்கின் வழங்க 44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் மாணவிகள் மற்றும் பெண்கள் பயனடைவார்கள். இதற்கு மக்கள் அனைவரும் வரவேற்பு அளித்துள்ளனர்.