Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… அடுத்தடுத்து பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி தொடர்ந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன. அவரின் உடற்கூறு ஆய்வில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் முகத்தில் இருந்த காயங்கள் சித்ராவின் நகக்கீறல்கள் என்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சித்ரா உடன் நடித்த சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் நண்பர்களை விசாரிக்க கோட்டாட்சியர் முடிவு செய்துள்ளார். மேலும் சம்பவத்தன்று படப்பிடிப்பு முடிந்து காரில் வரும்போது, ரூமுக்கு வந்த பிறகு சித்ரா மற்றும் ஹேம்நாத் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சண்டை முற்றி, சித்ரா தலையில் அடித்துக்கொண்டு அழுதுள்ளார்.

ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் ஹேம்நாத் வெளியே வந்த நிலையில், சித்ரா ரூமுக்குள் தூக்குப் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. சித்ராவின் தற்கொலையில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Categories

Tech |