அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இன்று ஆறு பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை ஐஐடியில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக இருந்தது. இன்று மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்டு சில தினங்களில் மாணவர்கள் மத்தியில் கொரோனாவால் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மீண்டும் கல்லூரிகள் மூடப்படுமா என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது.