Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக….! ”களமிறங்கிய பெண்கள்” ராணுவம் குவிப்பு……!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் அதிவிரைவு படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் முகாமிட்டுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி வர இருக்கின்றனர்.

இதனால் போராட்டம் நடைபெற்று வரும் செங்கோ, டிக்கீரி, காசிப்பூர் எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலிசார் குவிக்கப்பட்டு இரும்பு மற்றும் சிமெண்ட் சாலை தடுப்புகள், வேலிகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதிவிரைவு படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் முகாமிட்டுள்ளனர். தண்ணிர், பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |