Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேற யாருகிட்டயும் பேசாதீங்க…. உங்க அட்வைஸ் தேவையில்லை…. விவசாயிகள் அதிரடி முடிவு ..!!

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு த்திய வேளாண் துறை அமைச்சகமானது கடிதம் எழுதி இருந்தது. அதில், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதே போல திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். மேலும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டு தருவதற்கும் தயாராக இருக்கிறோம். எனவே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என சில பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை அனுப்பி இருந்தார்கள்.

தற்போது அந்த பரிந்துரை கடிதத்திற்கு பதில் அளித்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரக்கூடிய வேளாண் அமைப்புகள் மத்திய வேளாண் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அதில்,  மற்ற விவசாய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இது ஒரு திசை திருப்பும் முயற்சி ஆக இருக்கிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை விவசாயிகள் என அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்துவது இந்த விஷயத்தை திசை திருப்பும் நோக்கத்தை செய்து கொண்டு இருக்கிறது என்ற விஷயத்தையும் விவசாய சங்கங்கள் குறிப்பிட்டு, இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சிலரை மத்திய வேளாண்துறை அமைச்சர் அவரது வீட்டில் வைத்து சந்தித்து விவசாய சங்கங்களை சேர்ந்த பல்வேறு சங்கங்கள் இதற்கு ஆதரவு தருகிறார்கள் என பேட்டியளித்தார். அதற்கான எதிர்ப்பையும் தற்போது விவசாயிகள் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை என்று வந்தால்  பேச்சுவார்த்தையை எதிர்ப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் என அனைவரையும் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என கூறி மத்திய அரசு கொடுத்த பரிந்துரைகள் அனைத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என்று எழுத்துப்பூர்வமான கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

இன்று 21 ஆவது நாளை விவசாயிகள் போராட்டமானது எட்டி இருக்க கூடிய நிலையில் இன்றைய தினம் டெல்லியில் மிக முக்கியமான பிரதான சாலைகலை மீண்டும் முடக்க போவதாக விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியாக விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்து கொண்டு இருக்கிறார்கள். கடும் குளிர் நிலவினாலும் கூட போராட்டம் நடந்து வருகின்றது. டெல்லி மாநில அரசும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் விவசாயிகளின் பதில் கடிதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |