Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராங்கி’ முதல் பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன் …ட்விட்டரில் நன்றி தெரிவித்த த்ரிஷா…!!

‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டதற்கு ட்விட்டரில் நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் ‌.

இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘பனித்துளி’ என்ற முதல் பாடலை நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது படத்தின் பாடலை வெளியிட உதவிய சிவகார்த்திகேயனுக்கு நடிகை திரிஷா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் .

Categories

Tech |