இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதி வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முழு ஊரடங்கிற்கு நிகரான மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.