இந்திய தபால் துறை மற்றும் இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு சில புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய தபால் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு டாக் பே (DakPay) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
அதன் மூலம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது, மற்றவரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புதல், கடைகளில் க்யூ ஆர் கேன் செய்து பணம் செலுத்துவது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட சேவைகளை பெறலாம். இந்திய தபால் வங்கியில் டிஜிட்டல் சேவையும் இது வழங்கும். இது பொதுமக்கள் அனைவருக்கும் மிக உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.