நபர் ஒருவர் விமானநிலையத்தில் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விமான நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ். இவர் அங்குள்ள விமான உபகரணம் செய்யும் இடத்தில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவி, தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தில் ஜார்ஜ் பணிபுரிந்து கொண்டிருந்த போது விமானம் இயக்கக்கூடிய புஷ்பக் என்றழைக்கப்படும் இயந்திரத்தால் ஜார்ஜ் கீழே தள்ளப்பட்டு சம்பவ இடத்திலேயேநசுங்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையில் இவரின் மரணம் ஒரு விபத்து என்று முடிவாகியுள்ளது. இவர் என்வாய் ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால், ஒரு பச்சிளம் குழந்தை மற்றும் அவரது பெற்றோர்கள் வாழ்ந்து வந்தார் என்பதால் அவருடைய குடும்பத்திற்கு ஆன்லைனில் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் இவருடைய மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.