Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் பளபளக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க …!!!

முகம் ஜொலிக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாமா :

​கடலை மாவு

கடைகளில் கடலை மாவு கிடைக்கிறது என்றாலும் எளிதாக வீட்டில் தயாரித்து கொள்ளலாம். கடலை பருப்பு அரைகிலோ வாங்கி கல் இருந்தால் அதை சுத்தம் செய்து வெள்ளைத்துணியில் போட்டு துடைத்து எடுக்கவும். ஒரு நாள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். வெயில் இல்லாத காலங்களில் வாணலியில் இலேசாக வறுத்து எடுத்தால் அவை எளிதாக அரையக்கூடும். மிக்ஸியில் சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து எடுத்து சல்லடையில் சலித்து எடுத்து பதப்படுத்தி வைக்கலாம்.

 

ஆவாரம் பூ

ஆவராம்பூ மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும். இதை மொத்தமாக பறித்து வந்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வைக்கவும் . பூ மொறுமொறுப்பாக ஆகும் வரை உலர்த்தி வைக்கவும். வெயிலில் உலர்த்துவதாக இருந்தால் மெல்லிய துணியில் ஆவாரம் பூ போட்டு அதன் மேல் இன்னொரு துணியை போர்த்த வேண்டும். அப்படி செய்தாலும் அவை சீக்கிரமே உலர்ந்துவிடும். பிறகு ஆவாரம் பூவை மிக்ஸியில் பொடித்து தூளாக்கிவிடவும். இதையும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.
இதை நாம் என்ன செய்ய போகிறோம் 

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பொருளோடு கலந்து தேய்த்து குளிப்பதன் மூலம் எளிதாக சரும பிரச்சனைகளை கையாள முடியும்.

வறண்ட சருமத்தை கொண்டிருப்பவர்கள் இந்த பொடியுடன் தயிர் கலந்து தேய்க்கலாம்.

எண்ணெய்ப்பசை கொண்டிருப்பவர்கள் எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தலாம்.

முகப்பரு பிரச்சனை இருப்பவர்கள் இந்த பொடியுடன் கற்றாழை சேர்த்து பயன்படுத்தலாம்.

சன் டான் பிரச்சனை இருந்தால் அவர்கள் இந்த பொடியுடன் குங்குமப்பூ இழைகள்,சந்தனம் சேர்த்து பயன்படுத்தலாம்.

Categories

Tech |