Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எண்ணெய் வடிந்த முகம் என கவலையா …இனி கவலை வேண்டாம் …!!!

முக்கத்தில் உள்ள எண்ணெய் தன்மை நீங்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

முகத்தில் முகப்பரு வருவதற்கு காரணமே சருமம் எண்ணெய்ப்பசையாக இருப்பதுதான். எண்ணெய் சருமம் இருந்தால் முகப்பரு வரும் என்றாலும் வறண்ட சருமமாக இருந்தால் விரைவில் சுருக்கம் வரக்கூடும்.

எண்ணெய் சருமம்:
தினமும் குளித்த பிறகு அல்லது முகம் கழுவிய பிறகும் முகத்தில் அதீத பளபளப்பு இருந்தால், உங்கள் சரும நிறம் மாறவிலையென்றால் அது எண்ணெய்ப்பசை சருமம் தான். உங்கள் சருமத்துக்கேற்ற க்ரீம் வாகிகளை கண்டறிந்து அதை கொண்டு சருமத்தை சுத்தம் செய்யவும் பழக்க வேண்டும்.

புளோட்டிங் ஷீட்

முகத்தை கழுவி கொண்டே இருந்தால் எண்ணெய்ப்பசை போகும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அடிக்கடி முகத்தை கழுவுவதால் எண்ணெய் பசை அதிகரிக்குமே தவிர குறையாது. அதனால் எப்போதும் கையில் புளோட்டிங் ஷீட் வைத்திருங்கள். இது அழகு பொருள் கிடைக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

மாய்சுரைசர்

எண்ணெய்பசைக்கு மாய்சுரைசர் பயன்படுத்தகூடாது என்றூ பலரும் தவிர்க்கிறார்கள். இதனால் சருமம் முதலில் எண்ணெய்ப்பசை இல்லாமல் வறட்சியை சந்திக்கும். படிப்படியாக அதிக எண்ணெய்ப்பசையை உற்பத்தி செய்யும். அதனால் மாய்சுரைசரை தவிர்க்காம்ல் பயன்படுத்துங்கள்.மேக்-அப் :

அதிகமாக மேக்- அப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய்ப்பசை வெளிப்படையாக தெரியும். மேக் அப் செய்யும் போது எண்ணெய்ப்பசை ஏற்காத க்ரீம்களை தேர்ந்தெடுக்கவும். அதிக மேக் அப் பயன்படுத்த வேண்டாம். பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் இயன்றவரை வீட்டிலிருக்கும் தேன், ஓட்ஸ், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Categories

Tech |