கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சளை விட மணமாகவும், தோல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. இதில் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி என்பதை காணலாம்:
அழகு மற்றும் நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து, வாசனைப் பொருள், சோப்பு, தைலம் போன்ற பொருட்கள் தயாரிப்பதில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது.
தோல் சம்மந்தமான நோய்கள் தீர, கஸ்தூரி மஞ்சள் தூளை சுடு நீரில் குழைத்து, பூசிவர வேண்டும். கஸ்தூரி மஞ்சள் மற்றும் துளசி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரத்திற்கு பின் வெந்நீரால் குளிக்க வேண்டும்.

சில இளம் பெண்கள் முகத்தில், ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. அதை நீக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்தோ அல்லது குழைத்தோ, முகத்தில் பூசிக் கழுவி வர முடி வளர்வது தடைப்பட்டு முகம் பொலிவு பெரும்.
பெண்கள், மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சிறுது நேரம் கழித்து குளித்து வர தோல் நோய்கள் முற்றிலும் நீங்கி விடும். கஸ்தூரி மஞ்சளை, சிறுது வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் உள்ள இடத்தில் பூசி வர கட்டிகள் உடனே நீங்கும். பெண்கள், சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, கஸ்தூரி மஞ்சளை இடித்து, தூளாக்கி முகத்திற்குப் பூசி வருவதால், முகத்தில் பொலிவு ஏற்பட்டு, முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.
மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கை சம அளவு எடுத்து, அரைத்து முகத்தில் பூசி வர, முகம் மிகுந்த பளபளப்புடன் காணப்படும்.
மஞ்சள்தூள், பயித்தமாவு தூள், தயிர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர, முகம் பளபளப்பாக மாறும்.