தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா – கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கின்றது என்று கூறி சினிமா பிரபலங்கள் அரசியல் நகர்வை நகர்த்தி வருகின்றனர். அந்த வகையில் கமலஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தும் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சிக்கான அறிவிப்பை அறிவித்து, ஜனவரியில் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக தெரிவித்து விட்டார். இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள் என நம்பிக்கை உள்ளது. நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுங்கி விட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.