Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்கள் எளிதில் உடல் எடை குறைக்க எளிய வழி… இதை செய்யுங்கள்…!!

பெண்கள் எளிதில் உடல் எடை குறைக்க எளிய வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

காலிஃப்ளவர் :

காலிஃப்ளவரில் குறைவான கலோரிகளே இருக்கின்றன. இது அரிசி மற்றும் மாவு போன்ற உணவுகளுக்கு ஒரு மாற்றாக இருக்கலாம். ஒரு கப் காலிஃப்ளவரில் வெறும் 25 கலோரிகளையே காணப்படுகிறது. எனவே நீங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதை சாப்பிட்டு கொண்டு வரலாம்.

​​பச்சை மிளகாய்

உங்கள் சாலட் அல்லது சாண்ட்விச்சில் பச்சை மிளகாயை சேர்த்து வரலாம். இதுவும் உங்களுக்கு கலோரியை குறைக்க சிறந்த உணவாகும். இதில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளன. இது கொழுப்பை எரிக்க பயன்படுகிறது. இதில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொப்பையை குறைக்க பயன்படுகிறது. உங்க மனநிலையை உயர்த்தவும் உதவுகிறது.

கேரட்

கேரட் மற்றொரு எடை இழப்பு காயாகும். பெண்கள் தங்கள் உணவில் சேர்க்க வேண்டிய காய் இது. நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள இந்த காய்கறியை உணவில் பல்வேறு வழிகளில் நீங்கள் சேர்த்து வரலாம். நீங்கள் கேரட் ஜூஸ், சாலட் அல்லது ஸ்மூத்தி போன்றவற்றில் கூட இந்த காயை நீங்கள் சேர்க்கலாம். இந்த காய் உங்களின் பித்த சுரப்புக்கு உதவுகிறது. இதனால் கொழுப்பை எரிக்க முடியும். எடையையும் குறைக்க முடியும்.

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கலோரிகளை குறைக்கவும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. பச்சை இலை காய்கறிகள் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து பசி ஏற்படுவதை தடுக்கிறது. இதன் மூலம் எடையை இழக்க முடியும்.

பிரக்கோலி

பெண்களுக்கு எடையை இழக்க உதவும் காயாகும். இந்த பச்சை காய்கறியில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் அதிகப்படியான உணவைத் தடுக்க உதவுகிறது.

Categories

Tech |