நடிகை திரிஷாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் உஸ்பெகிஸ்தான் பகுதியில் படமாக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த படப்பிடிப்பு கடும் குளிரையும் பொருட்படுத்தாது வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘பனித்துளி விழுவதால் அணையாது தீபம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது . கபிலன் எழுதியுள்ள இந்தப் பாடல் வரிகளை சின்மயி, சத்யா, யாசின் நிசார் பாடியுள்ளனர் . இதையடுத்து நடிகை திரிஷா ஐந்து மொழிகளில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.