நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாறா’ . இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அலெக்சாண்டர் பாபு, ஷிவதா, எம்.எஸ். பாஸ்கர், கிஷோர் ,அபிராமி, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2015ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதிமேனன் மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘மாறா’ . இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 8ஆம் தேதி உலகம் முழுவதும் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .