Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதிய மழை இல்லை….. “இளநீரின் விலை உயர்வு” ஏற்றுமதி செய்வதில் சிக்கல்….. வியாபாரிகள் கவலை…!!

போதிய மழை இல்லாத காரணத்தால் இளநீரின் விலை உயர்ந்ததோடு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடி ஆகும். பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்விள இளநீர் தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர்.

Related imageஆனால் தற்போது போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, சேர்த்துமடை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் காய்ப்பது குறைந்துள்ளது. இதனால் இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு இளநீரின் விலை 40 ரூபாயில் முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெளிமாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |