நடிகை சமந்தா ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் சண்டைக்காட்சிகளில் மிரட்டியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரியாமணி ,ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . தற்போது இந்த தொடரின் 2வது சீசன் தயாராகியுள்ளது . இதில் நடிகை சமந்தா நடித்துள்ளார்.
இது குறித்து பேசிய சமந்தா இந்த தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் ,ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் என்னை பார்த்து பழகியவர்களுக்கு இந்தக் கேரக்டர் ஆச்சரியமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குனர்கள் ‘சமந்தா சண்டைக்காட்சிகளில் மிரட்டிவிட்டார். இவர் நடித்த ஆக்ஷன் காட்சிகள் மிக தத்ரூபமாக வந்திருக்கிறது’ என புகழ்ந்துள்ளார் .