Categories
உலக செய்திகள்

இந்தியா சிறப்பா பண்ணிருக்காங்க…. எங்களுக்கு முன்னுதாரணம் …. புகழ்ந்து தள்ளிய பிரிட்டன் பிரதமர்…!!

பிரிட்டன் பிரதமரால் இந்தியாவிற்கு கிடைத்த பாராட்டு பெருமையடைய செய்துள்ளது. 

உலக நாடுகளின் அனைத்து தலைவர்களும் பருவநிலை மாநாடு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியானது காணொலிக் காட்சியின் மூலமாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி பருவ நிலை ஒப்பந்தத்தின் 5 ம் ஆண்டு தினத்திற்காக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமரான  போரிஸ் ஜோன்சன், இந்தியாவின் சோலார் மின்சக்தி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்  சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறியதாவது:- சோலார் மின்சக்தி திட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் செயலாற்றியது  சிறப்பாக இருந்தது. இதேபோல்  நாமும்  பின்பற்றுவோம். இதனை, நாம் உருவாக்க போகும் மிகப்பெரிய சோலார் திட்டத்துக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வோம் என்றார். மேலும் அவர்  கொரோனா நோய்த்தொற்றை விட மிகவும் அபாயகரமானது காலநிலை மாற்றம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Categories

Tech |