Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணியா…? முந்தியடித்த மக்கள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்க  கூட்டம் அதிகரித்ததால் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய்க்கு நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டது.இதனால் அங்கே அதிக மக்கள் திரண்டதால் கடை உரிமையாளரை கைது செய்தனர். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும்  என்று ரிசர்வ் வங்கி பலமுறை கூறியுள்ளது. ஆனால் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று இன்னும் பல இடங்களில் கூறிக்கொண்டு வருகின்றனர்.இதனால் ஆயிரக் கணக்கில் பத்து ரூபாய் நாணயங்கள் வைத்திருப்பவர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளார்கள்.

பல கடைகளில் 10ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் பலரும் கூறுகின்றனர். இந்நிலையில்விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டி கடையில் 10ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுவதாக வாட்சப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்த பத்து ரூபாய் நாணயங்களை பொறுக்கி எடுத்து அந்த பிரியாணியை வாங்குவதற்காக அக்கடைமுன் திரண்டனர். நேரம் செல்ல செல்ல அங்கு கூட்டம் அதிகமானது. ஆனால் அங்கு அதிக நேரம் ஆகியும்  பிரியாணி வராததால் பிரியாணி வாங்க வந்தவர்கள்  பிரியாணி செய்யும் இடத்திற்கு சென்றனர்.

ஆனால் அங்கு பிரியாணி வழங்க மாட்டோம் என்றும் கடையில் வைத்து தான் பிரியாணி வழங்குவோம் என்றும் கூறினர். அதனைக் கேட்ட மக்கள் மீண்டும் கடைக்கு திரும்பி வந்தனர். சிறிது நேரத்தில் பிரியாணியும் வந்தது.அங்கு நின்ற பொது மக்கள் வரிசையில் நிற்காமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு  நின்றனர். கூட்டம் அதிகம் கூடியதால் அப்பகுதிக்கு வந்த போலீசார் அக்கூட்டத்தை கலைத்தனர் . பின்பு மற்றொரு இடத்தில் அந்த பிரியாணி கடை திறக்கப்பட்டது.

அங்கும் கூட்டமாக சேர்ந்து திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அறிந்த போலீசார் அங்கும் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் பிரியாணி வாங்க வந்த பொதுமக்கள் அனைவரும் நாலபுறமாக தெறித்து ஓடினர்.இதையடுத்து பிரியாணி வாங்க வந்தவர்கள் பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கே மீண்டும் சென்றனர்.

வேறுவழியின்றி அங்கேயே பத்து ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொண்டு சிக்கன் பிரியாணி வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கி சென்றனர். ஆனால் பலருக்கு பிரியாணி கிடைக்காததால் மிகவும் கவலையுடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து  பிரியாணி கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர் புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது தெரியவந்தது.கடையை பிரபலம் ஆக்குவதற்காக இப்படி பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுவதாக தெரிவித்தார். கொரோனா வேகமாக பரவி வரும் இக் கட்டத்தில் ஊரடங்கு விதியை மீறி சாலையோர கடைகளை திறந்து மக்கள் கூட்டம் கூடுவதற்கு காரணமாக இருந்ததால் போலீசார் அவரது மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |