தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி எட்டு மாதங்களுக்கு பிறகு நேற்று மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இதனையடுத்து தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனிநபர் இடைவெளி கடைபிடித்து குற்றால அருவிகளில் குளிக்கலாம். கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பிரத்தியேக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் குற்றால அருவிகளில் இன்று காலை முதல் திரண்டுள்ளனர்.