‘அண்ணாத்த’ பட கெட்டப்பில் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அருகில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் திரைப்படம் ‘அண்ணாத்த’ .இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர் .
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கியுள்ளது . இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அண்ணாத்த பட கெட்டப்பில் ரஜினி மாஸ்க் அணிந்திருக்க ,அருகில் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .