Categories
சினிமா தமிழ் சினிமா

2020யில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்கள்… முதலிடத்தை பிடித்து மாஸ் சாதனை படைத்த ‘மாஸ்டர்’ படம்…!!

இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்தியப் படங்களில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது .

ஆண்டுதோறும் சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் குறித்து சர்வே எடுப்பது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பதிவுகள் இடம்பெற்றுள்ள தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/TwitterIndia/status/1338346797706539008

அதில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படம் பெற்றுள்ளது. அடுத்ததாக நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் சூர்யாவின் சூரரை போற்று 5வது இடத்தையும் ரஜினியின் தர்பார் 10 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

அதேபோல் நடிகர்கள்  பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ள பட்டியலில் விஜய் மூன்றாவது இடத்தையும் சூர்யா  5வது இடத்தையும் தனுஷ் 8வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Categories

Tech |