இளைஞர் ஒருவர் புறப்பட இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய சமபவம் பயணிகளை பீதியடைய செய்துள்ளது.
அமெரிக்காவில் நிவேடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகாஸ் நகரில் Mccarran விமான நிலையத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்புவதற்காக ஓடுதளத்தில் தயாராக நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென வாலிபர் ஒருவர் விமானத்தின் இறக்கையின் மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளார். இதை கண்ட விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த சம்பவம் குறித்து விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால் வாலிபர் இன்னும் உயரமாக ஏற முயன்றுள்ளார். இதனால் அவரை தடுக்க இரண்டு காவலர்கள் இறக்கையின் மீது ஏறிய போது, இன்னும் உயரமாக ஏறிய வாலிபர் கீழே விழுந்துள்ளார். இதனால் அவருடைய தலையில் பலமாக அடிபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பிறகு விமானம் முழு சோதனைக்கு உட்படுத்தபடுவதற்காக திரும்பியுள்ளது.
Appeared to be an interesting day at McCarran today. pic.twitter.com/M7vv3Gh6oT #vegas
— Mick Akers (@mickakers) December 13, 2020