இன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இந்தியாவில் பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலா சரியாக ஒரே நேர்கோட்டில் வரும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படும். இந்நிலையில் இந்த வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணி வரை வானில் முழு சூரிய கிரகணம் நிகழ போகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதே போல இந்த சூரிய கிரகணம் இரவு நேரத்தில் நிகழ்வதால் இந்தியாவில் தெரிய வாய்ப்பே கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்காவில் முழுமையாக தெரியும். மேலும் சில தினங்களுக்கு முன்பு சந்திர கிரகணம் பகலில் நிகழ்ந்தது என்பதால் அது இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில் இதற்கு முந்திய சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.