கணவர் கண் முன்னே பேருந்து மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூரை சேர்ந்த தம்பதியினர் கணபதி மகராசி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கணபதி, மகராசி மற்றும் இளைய மகன் முருகேசன்ஆகிய மூவரும் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக சென்ற அரசு பேருந்து மகராசியின் மீது மோதியது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மகராசி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.