இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவரது ரசிகர் கொடுத்த பரிசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைத் திறமையால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் ஆஸ்கர் விருது, கிராமிய விருது, உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வரிகளில் வரையப்பட்ட அவருடைய ஓவியத்தை பரிசாக அளித்துள்ளார். அந்த ஓவிய புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது .