நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .
தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியிருந்த பிஸ்கோத் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிப்பில் தயாராகி வந்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .
இயக்குனர் ஜான்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் கவரப்பட்டது . இந்நிலையில் படப்பிடிப்பின் இறுதிநாளில் படக்குழுவினருடன் நடிகர் சந்தானம் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .