ரோஜா இதழ்களை வைத்து முகத்திற்கு அழகு சேர்ப்பது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் இருக்க, முதலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தம் செய்து, பின் அதனை மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, மைபோல் அரைத்து எடுக்கவும். பின்பு அரைத்த பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். அதனை 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து, பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சூரிய கதிர்கலினால் ஏற்படும் சரும பாதிப்பில் இருந்து நீங்க, பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்கு கலந்து, அதனை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக தோன்றும்.
பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

ரோஜா – 4
தயிர் – 1/4 கப்
ஆலிவ் ஆயில் – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் 4 ரோஜா இதழ்களுடன், 1/4 கப் தயிர் சேர்த்து மையாக அரைத்துக் வைக்கவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
மேலும் அதனுடன் எலுமிச்சை சாறு கலந்தால், ரோஜாப்பூ ஃபேஸ்பேக் தயார். இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும்.