Categories
சினிமா தமிழ் சினிமா

Now or never என்ற வாசகம்… கேக் வெட்டிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்ப இல்லனா எப்பவும் இல்ல என்ற வாசகம் கொண்ட கேக் வெட்டி கொண்டாடினார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் அனைவரும் பல்வேறு சமூக நலன்களை செய்து, ரஜினிகாந்த் வீட்டை சுற்றிலும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு, இப்ப இல்லனா எப்பவும் இல்ல என்ற பொருளில் now or never என்ற வாசகம் கொண்ட கேக் வெட்டி கொண்டாடினார். ரஜினி கேக் வெட்டிய புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘Happy birthday my life… Dearest appa.. என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |