டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்திய விவசாயிகள் நாளை பல இடத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க பல விவசாயிகள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் ராஜஸ்தானை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையை மறியல் செய்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அவ்வகையில் நாளை நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிட போவதாக கூறியுள்ளனர். மேலும் பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் போன்றவையும் முற்றுகையிடப்படும் என அறிவித்துள்ளனர்.இதனிடையே வரும்வாரத்தில் ஒரு நாள் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அரசு சார்பாக எதிர்பார்க்கப்படுகிறது.