திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மர்ம நபர்கள் தீபத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக மலைமீது மகா தீபத்தை ஏற்றுவர். தீபம் மலைமீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படும். அதே சமயத்தில் மலை மீது அமைய பெற்றுள்ள தீபத் தூணிலும் விளக்கு ஏற்ற வேண்டுமென்று இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மலையின் மீது அமைந்துள்ள தீபத்தூணில் மர்ம நபர்கள் சிலர் தீபத்தை ஏற்றி உள்ளனர்.மேலும் தீபத்தூணின் அருகே தர்கா ஒன்று அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்றிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.