தமிழகத்தில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை நாளை மீண்டும் திறக்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மெரினா கடற்கரை இன்னும் மூடப்பட்டு இருப்பதால், உயர் நீதிமன்றம் மெரினா கடற்கரையை விரைவில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. அதன்படி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஊரடங்கு பற்றி ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சுத்தம் செய்யும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.