அமெரிக்காவில் வரும் திங்கட்கிழமை முதல் பைசர் கொரோனா தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். பைசர் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தரவுகளை ஆய்வு செய்த தடுப்பூசிக்கான வல்லுநர் குழு, 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.