Categories
சினிமா தமிழ் சினிமா

புதிருக்கு விடையை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா… என்ன தெரியுமா? …!!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஒரு திரைப்படத்தின் டைட்டில் குறித்து ட்விட்டரில் போட்ட புதிருக்கு விடையை இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியிட இருப்பதாகவும் அது ஏன்? என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் யுவன் சங்கர் ராஜா டுவிட்டரில் புதிர் போட்டிருந்தார்.

இந்தப் படத்தின் டைட்டில் ரஜினி படத்தின் டைட்டிலாகவோ அல்லது அவரது பஞ்ச் வசனமே டைட்டிலாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதற்கான விடையாக டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘ஸ்டார்’ என்ற டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது. ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்திற்க்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Categories

Tech |