Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தின் அசத்தலான அப்டேட்… ரஜினி பிறந்தநாளுக்கு இயக்குனர் சிவா வெளியிட்ட வீடியோ…!!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் . அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கிவரும் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சூப்பர் ஸ்டாருக்கு படக்குழுவினர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு அண்ணாத்த படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதில்  வருகிற டிசம்பர் 15ஆம் தேதி ரசிகர்களின் ஆதரவோடு அண்ணாத்தா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறி இருக்கிறார் ‌. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |