Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா தற்கொலை”… பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திடம்… போலீஸ் விசாரணை..!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து பாண்டியன்ஸ்டோர் சக நடிகர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிக தைரியமான பெண் என்று உலகிற்கு தோன்றிய சித்ரா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவரது கணவர் மற்றும் தாய் கொடுத்த மன அழுத்தமே என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவண விக்ரம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்புத் தளத்தில் ஹேம்நாத் ரவி குடித்துவிட்டு வந்து தகராறு செய்தாரா? சித்ரா தான் மன உளைச்சலில் இருந்து குறித்து ஏதாவது கூறினாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்து வாக்குமூலத்தையும், அவரது தந்தை புகாரிலும் பல முரண்பாடுகள் உள்ளதாக தொடர்ந்து நான்காவது நாளாக ஹேம்நாத் இடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |