பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம் 140 கோடி வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் நிர்ணயித்துள்ளது.
கடந்த 2019 பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணியர் 6 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2020இல் 8 லட்சம் பயணியர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல் 2019இல் பொங்கல் சிறப்பு பஸ்களின்வருவாய் 109 கோடியாக இருந்தது. 2020ஆம் ஆண்டு 129 கோடியாக உயர்ந்தது.
பஸ் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனாவால் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு தீபாவளி சிறப்பு பஸ்களின்வருவாய் சரிந்து காணப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகை வருவாய் உயர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் 140 கோடி வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் நிர்ணயித்துள்ளது. அதற்கு ஏற்ப சிறப்பு பஸ்களில் முன்பதிவு வழக்கமாக டிசம்பர் 20 இல் தொடங்கப்படும் நிலையில் நடப்பாண்டு கடந்த 8ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா காரணமாக இந்த இலக்கு எட்டப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் “பிரபல ஆமினி பஸ் பேருந்து இயக்கத்தை தொடங்காமல் உள்ளதால் முன்பதிவும் தொடங்கவில்லை. ஆனால் அரசு பஸ்களில் முன்பதிவு முன்கூட்டியே தொடங்கியுள்ளோம். இதன்மூலம் வருவாயில் கணிசமான அளவு உயரும். கடந்த ஆண்டைப் போல் நடப்பாண்டு ஜனவரி 10 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கி ஜனவரி 18ஆம் வரை இயக்கப்படும். 140 கோடி இலக்கை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்று கூறியுள்ளார்.