தம்பதியினர் உறவில் விரிசல் தொடங்கிவிட்டதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நபர்களுடன் நட்புறவு கொண்டுள்ளனர். அவர்களின் நட்பு நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. அனைத்து உறவுகளிலும் மிகவும் சிறப்பான உறவு தம்பதியினர் உறவு. அப்படிப்பட்ட உறவில் விரிசல் தொடங்கி விட்டதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அவை, எதிர்மறையாகவே தொடங்கும் உரையாடல்கள். பிரச்சனைகளை கவனிக்காதது போல் இருத்தல். சண்டை போடுவதை நிறுத்தி விலகலை கடைபிடித்தல் அல்லது வாக்குவாதம் பெரிதாகி சாதாரண சண்டை கூட பெரிதாக மாறுவது.
மேலும் காதல் வந்த கணத்தை, ஆரம்ப காலத்தை மறந்து விடுதல். எப்போதும் மோசமானதையே கற்பனை செய்தல். விமர்சனம் செய்தல். விலகி விட்ட உணர்வு மற்றும் இயக்கம். துணைவர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை கற்பனை செய்தல் போன்றவை அதன் அறிகுறிகளாக உள்ளன.