நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டாம் அறிக்கை போதும் என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் அஜித்தின் 59வது படமான வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கொரோனா பரவலுக்கு முன்னரே முடிவடைந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி உள்ளது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜித் பைக்கில் வேகமாக வந்து, அன்புள்ள வில்லன்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்கியது.
அப்போது எதிர்பாராதவிதமாக அஜித் வந்த பைங் கவிழ்ந்தது. அதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரெண்ட் செய்து வருகிறார்கள்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் அஜீத் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள பதிவில், “படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட கருதாமல் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று அஜித் கடுமையாக உழைத்து வருகிறார். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அஜித் ஆகிய இருவரும் இணைந்து வலிமை படத்தின் அப்டேட் குறித்து முடிவு செய்வார்கள். அதன்பிறகு அப்டேட் வெளியிடப்படும் வரையில் ரசிகர்கள் காத்திருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் அப்டேட் தேவை இல்லை.. இந்த அறிக்கை ஒன்றே போதும்.. என்று கூறி மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.