தக்காளி பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 2 நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 8
பொட்டுக்கடலை – 4 ஸ்பூன்
பூண்டு தோலுரித்தது – 12 பல்
சின்ன வெங்காயம் – 16 பல்
பெருங்காயம் – 3 சிட்டிகை
கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, பூண்டு 12 பல், வரமிளகாய் 8, சின்ன வெங்காயம் 16, பொட்டுக்கடலை 4 ஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் மிதமான தீயில் மூன்றிலிருந்து நான்கு நிமிடம், இந்த பொருட்கள் அனைத்தும் வதங்கியவுடன், இறுதியாக 2 மீடியம் சைஸ் தக்காளி பழத்தை போட்டு, 2 நிமிடங்கள் வதக்கி, பின் இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
அதன்பின் வதக்கிய கலவையை மிக்ஸியில் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இந்த சட்னியை செய்வதற்கு 5 நிமிடங்கள் ஆகும் அவ்ளோதான். ஆனால் சுவையோ அந்த நாள் முழுவதும் உங்க நாவில் இருக்கும்.