இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
அண்ணா பல்கலைக்கழக முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அனைத்து இளங்கலை, முதுகலை படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக நடைபெறாது.
ஏப்ரல் மாதத்தின் இறுதி வரை ஆன்லைன் மூலமாக மட்டுமே இவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு ஐந்து வகுப்புகள் மட்டுமே நடைபெறும். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடியாக வகுப்புகள் நடைபெறும்” என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.