Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு வந்த சந்தேகம்” இரு உயிரை பறித்து…. பிள்ளைகளை அனாதையாக்கியது…!!

சிறிய சந்தேகத்தால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துள்ள அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் குப்பம்மாள் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கதிர்வேல்- மணிமேகலை. இவர்களுக்கு அக்ஷயா(8), நிவாஸினி (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கதிர்வேல் அந்த பகுதியில் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கதிர்வேல் நடத்தையில் அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவருக்கும் தகராறு வந்துள்ளது. இதையடுத்து அனைவரும் தூங்கு சென்றுள்ளனர்.

அதன்பின்னர் சிறிது நேரத்தில் மணிமேகலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை தூக்கத்தில் இடையில் எழுந்து பார்த்த கதிர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் கதிரும் தூக்கிட்டு இறந்துள்ளார். காலையில் இரண்டு குழந்தைகளும் எழுந்து இரு உடல்களையும் பார்த்து கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் கணவன், மனைவி இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறிய சந்தேகத்தால் இருவரும் தற்கொலை செய்ததால் குழந்தைகள் அனாதையாக நிற்கின்றன. இதுபோன்று தவறான முடிவுகள் பெற்றோர்களுக்கு வரும் போது தன்னுடைய குழந்தைகளை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வராது.

Categories

Tech |