Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர் செத்து விட்டார்” ஆட்டோ ஓட்டுனர் சிறையில் மரணம்…. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிறையில் மரணமடைந்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம். கடந்தவாரம் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் இவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் வைக்கப்பட்டிருந்த மகாலிங்கம் நேற்று காலை திடீரென இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தின் காவலில் இருந்த மகாலிங்கம் உயிரிழந்தது  குறித்து, அவரது  உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரித்து வருகிறார். இதனிடையே  கணவரின் மரணத்திற்கு, காவல்துறை தான் காரணம் என்று மகாலிங்கத்தின்  மனைவி  கூறியுள்ளார்.

Categories

Tech |