சூர்யா நடிக்கும் நவரச அந்தாலஜி படத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் மலையாள நடிகை ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
சூர்யா நடிக்கும் நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தை கௌதம் மேனன் அவர்கள் இயக்குகிறார். இப்படமானது நவரசத்தை மையமாக கொண்டு உருவாகிறது. இப்படத்தை 9 இயக்குனர்கள் இருக்கின்றார்கள்.கொரோனாவால் பாதிப்பை சந்தித்துள்ள திரை உலகிற்கு நிதி திரட்டும் வகையில் இப்படத்தை உருவாக்குகின்றனர். வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து கௌதம் மேனன் மற்றும் சூர்யா அவர்கள் இணைந்துள்ளனர் .
பி.சி ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் சூர்யா நடிக்கும் குறும்படத்தில் ஜோடியாக மலையாள திரை உலகில் பிசியாக இருக்கும் பிரயாகா மார்ட்டின் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே தமிழில் பிசாசு படத்தில் நடித்திருக்கிறார்.