ஆர்யா நடிக்கும் படத்தை ஓ .டி .டி-யி ல் வெளியிடலாமா என பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
கொரோனா காரணமாக பல மாதங்களாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால், பல படங்கள் ஓ .டி .டி-யில் ரிலீஸ் செய்யப்பட்டன. பொன்மகள் வந்தாள், க .பெ .ரணசிங்கம், பென்குயின், நிசப்தம் ,அந்தகாரம், டேனி, லாக்கப் ,காக்டெயில் போன்ற படங்கள் அனைத்தும் ஓ. டி.-யில் ரிலீஸ் செய்யப்பட்டன.
தற்போது தியேட்டர் திறக்க படலாம் என்ற அறிவிப்பு வந்த பிறகு தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால் தியேட்டரில் கூட்டம் குறைவாக இருக்கிறது. இந்நிலையில் ஆர்யா நடித்துள்ள டெடி படத்தை ஓ.டி.டி -யில் வெளியிடலாமா..? என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டெடி படத்தில் சாயிஷா, சாக்ஷி அகர்வால், கருணாகரன், மகிழ் திருமேனி பலர் நடிக்கின்றனர். டெடி படத்தில் பொம்மையும் முக்கிய கதாபாத்திரத்தில் உள்ளது. டெடி படத்தை சௌந்தரராஜன் அவர்கள் இயக்குகிறார்.