Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… சிக்கும் அரசியல் பிரமுகர்… பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ராவிற்கு வாட்ஸ்அப் மூலமாக அரசியல் பிரமுகர் ஒருவர்  தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் என் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

இந்நிலையில் சித்ராவின் உடலை இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பிரேத பரிசோதனையில், சித்ராவின் மரணம் தற்கொலைதான் என்று உறுதியாகியுள்ளது. இறந்து கிடந்த சித்ராவின் முகத்தில் காயம் இருந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பி இருந்தது. ஆனால் பரிசோதனையில் அவரது கன்னத்தில் இருந்த காயம் சித்ராவின் நகக்கீறல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்ராவின் மரணம் தற்கொலை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் சிலர் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடை திறப்பு விழாவுக்காக பெரம்பலூர் சென்று வந்த பிறகு, சித்ராவின் வாட்ஸ் அப்புக்கு அரசியல் பிரமுகர் ஒருவரிடம் இருந்து தொடர்ந்து மெசேஜ் வந்ததாகவும், இந்த புத்தாண்டை தன்னுடன் கொண்டாட வேண்டும் என சித்ராவை அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |