சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து இந்த நிறுவனம் ‘தளபதி 65’ திரைப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்நிலையில் நாளை காலை 11.07 மணிக்கு மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
🚨 Mega Announcement coming up!🚨
Can you guess when? pic.twitter.com/WDKkqYhS9u— Sun Pictures (@sunpictures) December 10, 2020
இந்த அறிவிப்பு அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரா ? தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பா? என ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சூர்யாவின் படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதால் இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்குமென்றும் கூறப்படுகிறது. எனவே நாளை வெளியாகும் அறிவிப்பு ரஜினி, விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்களில் எந்த படத்தின் அறிவிப்பு என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.